அன்பர்களே இன்றைக்கு எதிரி தொல்லை பில்லி சூனியம் ஏவலை விரட்டகூடிய எளிய ஆன்மீக முறை ஒன்றை பார்க்கலாம்......
1. ஓம் ஷண்முக பதயே நமோ நம :
2. ஓம் ஷண்மத பதயே நமோ நம :
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம :
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம :
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம :
6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம :
7. ஓம் நவநிதி பதயே நமோ நம :
8. ஓம் சுபநிதி பதயே நமோ நம :
9. ஓம் நரபதி பதயே நமோ நம :
10. ஓம் சுரபதி பதயே நமோ நம :
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம :
12. ஓம் ஷடஷர பதயே நமோ நம :
13. ஓம் கவிராஜ பதயே நமோ நம :
14. ஓம் தபராஜ பதயே நமோ நம :
15. ஓம் இகபர பதயே நமோ நம :
16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம :
17. ஓம் ஜயஜய பதயே நமோ நம :
18. ஓம் நயநய பதயே நமோ நம :
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம :
20. ஓம் குஞ்சரி பதயே நமோ நம :
21. ஓம் வல்லீ பதயே நமோ நம :
22. ஓம் மல்ல பதயே நமோ நம :
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம :
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம :
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம :
26. ஓம் இஷ்டி பதயே நமோ நம :
27. ஓம் அபேத பதயே நமோ நம :
28. ஓம் சுபோத பதயே நமோ நம :
29. ஓம் வியூஹ பதயே நமோ நம :
30. ஓம் மயூர பதயே நமோ நம :
31. ஓம் பூத பதயே நமோ நம :
32. ஓம் வேத பதயே நமோ நம :
33. ஓம் புராண பதயே நமோ நம :
34. ஓம் ப்ராண பதயே நமோ நம :
35. ஓம் பக்த பதயே நமோ நம :
36. ஓம் முக்த பதயே நமோ நம :
37. ஓம் அகார பதயே நமோ நம :
38. ஓம் உகார பதயே நமோ நம :
39. ஓம் மகார பதயே நமோ நம :
40. ஓம் விகாச பதயே நமோ நம :
41. ஓம் ஆதி பதயே நமோ நம :
42. ஓம் பூதி பதயே நமோ நம :
43. ஓம் அமார பதயே நமோ நம :
44. ஓம் குமார பதயே நமோ நம :
யாம் மேலே சொல்லியிருக்கும் துதி பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்......இதை நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும் இருக்கலாம். ஆனால் இதன் அருமை அறிந்தவர்கள் சிலராகத்தான் இருப்பார்கள்
இது முருகப்பெருமானின் அருளை வேண்டி பாடப் பெற்றதது.. இது கந்தபுராணத்தினுடைய சுருக்கமாக மொத்தம் 44 வரிகளை உடையது. இதனை படிக்கும் போது “நம :” என்ற சொல்லை ”நமஹ்” என்று உச்சரிக்கவும்.
பூஜை முறை
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்து விட்டு (முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்)
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.
ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.
சிவனருள் கிடைத்தால் முருகனருள் தானகவே வந்து சேரும். மிகப்பெரும் போர்க்களத்தில் அஞ்ச வேண்டாம் என வேல் துணையாக நிற்கும். மனதில் “முருகா” என்று இப்பிறவியில் ஒரு முறை நினைத்தாலே மறுபிறவிக்கும் வேல் முருகனருளாக வந்து நிற்கும்.
தினமும் 1 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும்...
ஓம் சரவணபவ