Wednesday, 9 May 2018

இப்படி செய்தால் உங்களுக்கு பணப் பற்றாக்குறை இருக்காதாம்...!


 


வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். உங்கள்  கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும்.
வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் கொழிக்கும்.


பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில  அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வந்தடையும். ஜோடி கழுதைப் படம், ஓடும் வெள்ளை குதிரை படம், அடிக்கடி பார்க்க பணம்  வரும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும். ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர  பணம் ஆகர்ஷணமாகும்.

உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி  ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது.


உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்  வாய்ப்பு ஏற்படும்.

கடன் தீர்க்க "மைத்ர முகூர்த்தம்"


கடன் தீர்க்க உகந்த ரகசிய நாட்கள் "மைத்ர முகூர்த்தம்" எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் ,   எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்...!!
மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம், மைத்ர முகூர்த்த நாட்களில்,  நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் ,கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி வேண்டும்....!! அவ்வளவு தான். எவ்வளவு பெரும் தொகையானாலும் , சிறுக சிறுக டைபட்டுவிடும்....!!

கடன் விரைவில் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம் 2018

4.4.18 புதன் இரவு 8.40 முதல் 10.40
15.4.2018 ஞாயிறு காலை 6.06 முதல் 8.06 வரை;
1.5.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.58 முதல் இரவு 8.58 வரை
14.5.2018 திங்கட்கிழமை அதிகாலை 3.54 முதல் 5.54 வரை
29.5.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.50 முதல் இரவு 8.50 வரை
10.6.2018 ஞாயிறு அதிகாலை 4.10 முதல் 6.10 வரை
25.6.2018 திங்கட்கிழமை மாலை 3.51 முதல் 5.51 வரை
7.7.2018 சனி நள்ளிரவு 1.57 முதல் 3.57 வரை
22.7.2018 ஞாயிறு மாலை 3.13 முதல் 4 வரை
23.7.2018 திங்கட்கிழமை மதியம் 2 முதல் மாலை 4 வரை
3.8.2018 வெள்ளி இரவு 10.56 முதல் 12.56 வரை
19.8.2018 ஞாயிறு மதியம் 12.08 முதல் 2.08 வரை
30.8.2018 வியாழன் இரவு 8.56 முதல் 10.56 வரை
15.9.2018 சனி காலை 10.08 முதல் 12.08 வரை
22.9.2018 சனி காலை 8.20 முதல் 10.20 வரை;
மதியம் 2.20 முதல் மாலை 4.20 வரை;
இரவு 8.20 முதல் 10.20 வரை;
நள்ளிரவு 2.20 முதல் 4.20 வரை;
27.9.2018 வியாழன் இரவு 8.40 முதல் 10.40 வரை;
6.10.2018 சனி காலை 6.55 முதல் 8.55 வரை;
மதியம் 12.55 முதல் 2.55 வரை;
மாலை 6.55 முதல் 8.55 வரை;
இரவு 12.55 முதல் நள்ளிரவு 2.55 வரை;
13.10.2018 சனி காலை 8.20 முதல் 10.20 வரை;
24.10.2018 புதன் மாலை 6.28 முதல் 8.28 வரை;
9.11.2018 வெள்ளி காலை 6.36 முதல் 8.36 வரை;
20.11.2018 செவ்வாய் மாலை 5.10 முதல் 6.19 வரை;
21.11.2018 சனி மாலை 4.23 முதல் 6.23 வரை;
6.12.2018 வியாழன் காலை 6.40 முதல் 8.40 வரை;
18.12.2018 செவ்வாய் மதியம் 2.30 முதல் மால 4.30 வரை;

இந்த மைத்ரமுகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில் சிறு தொகையை கட்ட தொடங்கினாலே..போதும்...!!விரைவில் கடனை தீர்க்கும் வளம் பெற்று விடுவீர்கள்...!!

இந்த பதிவை சேமித்து வையுங்கள்...!!

 பணம் கொடுத்து உதவ முடியலைன்னாலும்,

நல்ல விசயத்தை சொல்லிக்கொடுப்போம்

வெற்றி நாளாக மாற்ற


தினமும் எழுந்தவுடன் நாம் செலவு செய்யப் போகும் ஒரு பத்து நிமிடம்,அன்றைய நாளை வெற்றி நாளாக மாற்ற உதவும்.காலையில் எழுந்ததும் சூட்சுமமாக இறைவன் குடியிருக்கும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்.

கைவிரல் நுனியில் ஸ்ரீ லக்ஷ்மி தேவியும்,விரல்களின் அடிதளத்தில் ஸ்ரீ சரஸ்வதி, விரல்களின் நடு பாகத்தில் ஸ்ரீ கோவிந்தனும் இருப்பதாக ஐதீகம்.அதனால் அவர்களை வணங்கி ஒரு நாளை துவக்கினால்,அந்த நாள் இனிய நாளாக அமையும்.

வெற்றியை குவிக்க


எடுக்கும் காரியம் வெற்றியில் முடிய வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கும். தோல்வியே சந்திக்காமல் இருக்க முடியாது. ஆனால் அந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இரண்டு மடங்காக வெற்றியை குவிக்க தினமும் இந்த நரசிம்ம மந்திரம் சொல்லிப் பாருங்கள், வாழ்க்கையில் மாற்றம் தெரியும். இன்று வியாழன் கிழமை நரசிம்மருக்கு உகந்த நாள். இன்றே ஆரம்பிக்கலாமே ...
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
பொருள் :
பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதம் ஆகுமென்று தூணில் அவதரித்தவனே!
நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே! லட்சுமி நரசிம்மனே

எதிரி தொல்லை பில்லி சூனியம் ஏவலை விரட்டகூடிய எளிய ஆன்மீக முறை


அன்பர்களே இன்றைக்கு எதிரி தொல்லை பில்லி சூனியம் ஏவலை விரட்டகூடிய எளிய ஆன்மீக முறை ஒன்றை பார்க்கலாம்......

1. ஓம் ஷண்முக பதயே நமோ நம :
2. ஓம் ஷண்மத பதயே நமோ நம :
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம :
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம :
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம :
6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம :
7. ஓம் நவநிதி பதயே நமோ நம :
8. ஓம் சுபநிதி பதயே நமோ நம :
9. ஓம் நரபதி பதயே நமோ நம :
10. ஓம் சுரபதி பதயே நமோ நம :
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம :
12. ஓம் ஷடஷர பதயே நமோ நம :
13. ஓம் கவிராஜ பதயே நமோ நம :
14. ஓம் தபராஜ பதயே நமோ நம :
15. ஓம் இகபர பதயே நமோ நம :
16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம :
17. ஓம் ஜயஜய பதயே நமோ நம :
18. ஓம் நயநய பதயே நமோ நம :
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம :
20. ஓம் குஞ்சரி பதயே நமோ நம :
21. ஓம் வல்லீ பதயே நமோ நம :
22. ஓம் மல்ல பதயே நமோ நம :
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம :
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம :
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம :
26. ஓம் இஷ்டி பதயே நமோ நம :
27. ஓம் அபேத பதயே நமோ நம :
28. ஓம் சுபோத பதயே நமோ நம :
29. ஓம் வியூஹ பதயே நமோ நம :
30. ஓம் மயூர பதயே நமோ நம :
31. ஓம் பூத பதயே நமோ நம :
32. ஓம் வேத பதயே நமோ நம :
33. ஓம் புராண பதயே நமோ நம :
34. ஓம் ப்ராண பதயே நமோ நம :
35. ஓம் பக்த பதயே நமோ நம :
36. ஓம் முக்த பதயே நமோ நம :
37. ஓம் அகார பதயே நமோ நம :
38. ஓம் உகார பதயே நமோ நம :
39. ஓம் மகார பதயே நமோ நம :
40. ஓம் விகாச பதயே நமோ நம :
41. ஓம் ஆதி பதயே நமோ நம :

42. ஓம் பூதி பதயே நமோ நம :
43. ஓம் அமார பதயே நமோ நம :
44. ஓம் குமார பதயே நமோ நம :
யாம் மேலே சொல்லியிருக்கும் துதி பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்......இதை நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும் இருக்கலாம். ஆனால் இதன் அருமை அறிந்தவர்கள் சிலராகத்தான் இருப்பார்கள்

இது முருகப்பெருமானின் அருளை வேண்டி பாடப் பெற்றதது.. இது கந்தபுராணத்தினுடைய சுருக்கமாக மொத்தம் 44 வரிகளை உடையது. இதனை படிக்கும் போதுநம :” என்ற சொல்லைநமஹ்என்று உச்சரிக்கவும்.

பூஜை முறை

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்து விட்டு  (முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்)

பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.

ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.

சிவனருள் கிடைத்தால் முருகனருள் தானகவே வந்து சேரும். மிகப்பெரும் போர்க்களத்தில் அஞ்ச வேண்டாம் என வேல் துணையாக நிற்கும். மனதில்முருகாஎன்று இப்பிறவியில் ஒரு முறை நினைத்தாலே மறுபிறவிக்கும் வேல் முருகனருளாக வந்து நிற்கும்.

தினமும் 1 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும்...

ஓம் சரவணபவ

நமக்குதெரிந்ததும்தெரியாததும்



ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது .
2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும் .
3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது
4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது .
5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது .
6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது
7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .
8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது .
9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது .

பெண்கள்தெரிந்துகொள்ள_வேண்டியது

1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)
3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது .
4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.
5. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.
6. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும் .
7. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது
8. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது,அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் )பாதிப்பு அடையும் .
9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போககூடாது .
10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது
11. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

Tuesday, 8 May 2018

காலசர்ப்ப தோஷம்


இதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும். இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் மேலே காணும் தோற்றம் ஆகும்.
நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. அதற்கு பொருள் செலவு அதிகம். செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது.
நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது. அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். மேற்கண்ட துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.
முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும். அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும்.
முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று. அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும்.
அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும். ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று.
ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.
தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும்.
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய 
துவிதநாக பந்தம்
சேயா சேயாதே தேயா சேயாசே 
மாயா மாயாவா வாயா மாயாமா 
வாயா மாவாயா மாயா சேமாசே 
யோயா நேயாவோ யாயே தேயாளே.
பலன்கள்:
சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், அடிக்கடி பாம்புகளின் தொல்லை, மாலை சுற்றிப் பிறந்த தோஷம், மகப்பேறு காலத் துன்பம், இராகு கேது கிரக தோஷம் நீங்கப் பெறலாம்.