Thursday, 16 August 2018

ஸ்ரீ_மஹா_காலபைரவர்

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ மஹா காலபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.
தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.
தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.
சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.
அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லை களிலிருந்து விடுபட முடியும்.
ஓம் நமசிவாய 🙏

Sunday, 12 August 2018

அகத்தியர் அருள் வாக்கு!


குரு வழி காட்டுவார். ஆனால், ஊட்டமாட்டார் என்பதை எப்பொழுதுமே புரிந்துகொள். நாங்கள் ஊட்டினாலும் துப்புகின்ற குழந்தைகளாக இருந்தால், குதப்புகின்ற குழந்தைகளாக இருந்தால், எப்படியப்பா பாவ வினை தீரும்? எனவே, நாங்கள் கூறுகின்ற விஷயத்தை ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் ஆய்வு செய்யாமல் தொடர்ந்து எம் வழியில் வந்தால் கட்டாயம் ஞானக் கதவு திறக்குமப்பா!" அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
சுற்றி, சுற்றி, சுற்றி எங்கு வந்தாலும் பாவங்கள் மனிதனை நிம்மதியாக வாழ விடுவதில்லை. பாவங்களை விதியின் வாயிலாக பிறவியெடுத்து, பிறவியெடுத்து அந்தப் பிறவிகளில் ஏற்படும் அனுபவங்களை மனிதன் நுகர்ந்தே ஆகவேண்டும் என்பது விதியாகவே இருக்கிறது.
ஆயினும் தன்னலமற்ற தியாகங்களும், கடுகளவு துவேஷம் இல்லாத மனமும், அகங்காரமில்லாத மனமும், சிந்தனையில் சாத்வீகமும், அந்த சாத்வீகத்தில் உறுதியும், செயலிலும், வாக்கிலும், எண்ணத்திலும் நேர்மையும், பிறர் செய்கின்ற அபவாதங்களையும், துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு அப்படி துன்பங்கள் எப்பொழுதெல்லாம் யார் கொடுக்கிறார்களோ அவர்களை நிந்திக்காமல், அவர்களை தரக்குறைவாக பேசாமல், ‘ இந்த மனிதன் துன்பத்தைத் தருவதுபோல் தோன்றினாலும் நாம் செய்த பாவங்கள்தான் இவன் மூலம் துன்பங்களாக வருகிறது ‘ என்று எடுத்துக்கொண்டு சமாதானம் அடைவதும், ஒரு காலத்தில் தன்னை மதிக்காமலும், ஏளனமாகவும், அவமானப்படுத்தியும் பல்வேறு கெடுதல்களையும் செய்த மனிதன் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உதவிக்காக வரும்பொழுது முன்னர் நடந்ததையெல்லாம் எண்ணி பழிவாங்கும் உணர்வோடு செயல்படாமல் அவனை மன்னித்து பெருந்தன்மையாக நடத்துவதே ‘சித்தர்கள் வழி, சித்தர்கள் வழி‘ என்றெல்லாம் பலர் கூறுகிறார்களே ? அந்த வழியில் பிரதான வழியாகும். ‘சித்தர்களை வணங்குவேன், தலயாத்திரைகளும் செய்வேன், மந்திரங்களை உருவேற்றுவேன்.
ஆனால் பெருந்தன்மையோ, பொறுமையோ இல்லாது நடந்துகொள்வேன் ‘ என்றால் பலனேதுமில்லை. எனவே தளராத பக்தி, தடைபடாத தர்மம், உறுதியான சத்தியம், பெருந்தன்மை – இதுபோன்ற குணங்களை வளர்த்துக்கொண்டால் பெரும்பாலும் பாவங்கள் மனிதனை அதிகளவு தாக்காமலும், தாக்கினாலும் அதனைத் தாங்கிக்கொள்ளக்கூடிய ஒரு மனோபாவமும் ஏற்படும்.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் இறைவனின், மாற்று வடிவங்கள் என்பதை உணர்வதும் தனக்குள் உள்ள அண்ட சராசர பேராற்றலை உணர முயல்வதும்தான், துன்பமின்றி வாழ்வதற்கு ஒரு வழியாகும். அதற்கு, ஆன்மாவை படிப்படியாக எடுத்துச் செல்வதற்குத்தான், யாம் காட்டுகின்ற வழிமுறைகள்.
நெறி முறைகள், பக்தி வழிகாட்டுதல், ஆகமங்கள், தர்ம காரியங்கள். ஆனால் துன்பமில்லாத நிலையென்றால், இங்கு அவன் மனநிலை அகுதோப்ப மாறிவிடும் தவிர, வாழ்வு நிலை மாறாது, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு நோக்கமானது மாறிக்கொண்டே இருக்கும். இவன் நிம்மதியை ஒத்திப்போட்டுக்கொண்டே செல்வான். சந்தோஷத்தை ஒத்தி வைப்பதுதானே விதியின் வேலை, மாயையின் வேலை.
எனவே, இவற்றில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான், மனிதனின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அகுதொப்ப ஒரே தினத்திலோ, ஒரு சில ஆண்டுகளிலோ இதை செய்ய இயலாது என்பது எமக்கும் தெரியும். அந்த ஞானத்தை நோக்கி பயணத்தை துவங்க வைப்பதுதான், எமது பணியாக உள்ளது.
ஒரு மனிதனின் முன் ஜென்ம பாவத்தை குறைத்தால்தான், இகுதொப்ப விஷயமே அவன் சிந்தனைக்கு எட்டும், என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தர்மம் செய்யாமல் ஒருவன் பாவங்களை குறைக்கவே இயலாது. படைப்பெல்லாம் இறைவனுக்கே சொந்தம். இந்த கருத்தை மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் அசைபோட, துன்பங்களிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும், கிட்டும்!
ஆசிகள்! சுபம்!
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி போற்றி

காஞ்சிமஹா பெரியவா⚘ சொன்ன, வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்... படித்துவிட்டு பகிருங்கள்....

 🙏🙏
(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ
பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் 
செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை
மூன்றே நாட்களில் உணரலாம்.
(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும்
பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை
வேளையில் பறவைகளுக்கு
இனிப்பு பிஸ்கட்கள் வழங்க
வீண் விரயம் கட்டுப்படும்.
(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம்,
சோர்வு போன்றவை
நாள் முழுதும் இருப்பின்
இரவு படுக்கும் பொழுது
தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து
கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.
அதை குடிக்க கூடாது.
(4) காரணமில்லாத பய உணர்வு
இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ்
ஸ்டீல் வளையம் ஒன்று
மாட்டி வர பய உணர்ச்சிகள்
குறையும்.
(5) தற்கொலை எண்ணங்கள்
மேலும் வாழ பிடிக்காதது
போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி
கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற
ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி
அணிய வேண்டியதில்லை.
(6) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது
கூடவே சிறிது காகித பூ
எடுத்து செல்ல விபத்துக்கள்
ஏற்படாது.
(7) காலை எழுந்ததும் தங்க
நாணயம் அல்லது
தங்கங்கள் நிறைந்த
படம், ரூபாய் நோட்டுகள்
நிறைந்த படம் ஒன்று
பார்த்து வர செல்வ வளம்
பெருகும்.
(8) இடது கை கீழே
இருக்கும் படி படுத்துறங்க
ஆயுள் விருத்தியாகும்.
(9)வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.
(10) காரணமில்லாமல் இரவில்
குழந்தைகள் தூங்காமல்
அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை
வைக்க, குழந்தை நன்றாக
தூங்கும்.
(11)சமையலறையும், படுக்கையரையும் அருகருகே
இருக்கும் படி அமைத்து
கொண்டால் தம்பதியர்
ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
(12) துர் சக்திகள் நம்மை
அண்டாதிருக்க வீட்டு
வாசலில் மருதாணி
கொத்தை தொங்க விட
வேண்டும்.

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் ..... !


1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.
அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.
அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.
5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.
சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.
7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.
இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.
தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.
அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு.
ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட,
என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.
19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;
நாளைய பொழுதும் நிச்சயமில்லை;
இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.
ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.
24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

கிருஷ்ணரின் வார்த்தைகள்


நீ அனுபவித்தால் !
|| ராதேக்ருஷ்ணா ||
நீ க்ருஷ்ணனை கர்பத்தில் அனுபவித்தால்
உன்னை தேவகிக்குப் பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனை பிள்ளையாய் அனுபவித்தால்
உன்னை வசுதேவருக்குப் பிடிக்கும்!
நீ க்ருஷ்ணனை குழந்தையாய் அனுபவித்தால்
உன்னை யசோதைக்குப் பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனை மாட்டுக்காரனாக அனுபவித்தால்
உன்னை நந்தகோபருக்குப் பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனை காதலனாய் அனுபவித்தால்
உன்னை கோபிகைகளுக்குப் பிடிக்கும்!
நீ க்ருஷ்ணனை தகப்பனாக அனுபவித்தால்
உன்னை ருக்மிணிக்குப் பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனை பார்த்தசாரதியாய் அனுபவித்தால்
உன்னை அர்ஜுனனுக்குப் பிடிக்கும்!
நீ க்ருஷ்ணனை நண்பனாய் அனுபவித்தால்
உன்னை உத்தவருக்குப் பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனை தூதுவனாய் அனுபவித்தால்
உன்னை பாண்டவர்களுக்குப் பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனை தெய்வமாய் அனுபவித்தால்
உன்னை பீஷ்மருக்குப் பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனை கீதாசார்யனாக அனுபவித்தால்
உன்னை சஞ்சயனுக்குப் பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனை ஆபத்பாந்தவனாக அனுபவித்தால்
உன்னை த்ரௌபதிக்குப் பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனை ரங்கனாய் அனுபவித்தால்
உன்னை ஆண்டாளுக்குப் பிடிக்கும்!
நீ க்ருஷ்ணனை நாராயணனாய் அனுபவித்தால்
உன்னை ராமானுஜருக்குப் பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனை குருவாயூரப்பனாக அனுபவித்தால்
உன்னை மஞ்சுளாவுக்குப் பிடிக்கும்!
நீ க்ருஷ்ணனை பாண்டுரங்கனாக அனுபவித்தால்
உன்னை புண்டலீகனுக்குப் பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனை உடுப்பி க்ருஷ்ணனாக அனுபவித்தால்
உன்னை கனகதாஸருக்குப் பிடிக்கும்!
நீ க்ருஷ்ணனை கிரிதாரியாக அனுபவித்தால்
உன்னை மீராவுக்குப் பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனை ஸ்ரீ நாத்ஜீயாக அனுபவித்தால்
உன்னை வல்லபாச்சார்யருக்குப் பிடிக்கும்!
நீ க்ருஷ்ணனை பூரி ஜகந்நாதனாக அனுபவித்தால்
உன்னை க்ருஷ்ண சைதன்யருக்குப் பிடிக்கும்!
நீ க்ருஷ்ணனை ராஸநாயகனாக அனுபவித்தால்
உன்னை ஜயதேவருக்குப் பிடிக்கும்!
நீ க்ருஷ்ணனை அனந்த பத்ம நாபனாக அனுபவித்தால் உன்னை மஹாராஜா ஸ்வாதித் திருநாளுக்குப்
பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனை ஸ்ரீமத் பாகவதமாக அனுபவித்தால்
உன்னை சுகப்ரம்மரிஷிக்கும்ப் பிடிக்கும்!
நீ க்ருஷ்ணனை நாமஜபமாக அனுபவித்தால்
உன்னை ஹரிதாஸ்யவனுக்குப் பிடிக்கும்!
நீ க்ருஷ்ணனை ராதிகாதாஸனாக அனுபவித்தால்
உன்னை க்ருஷ்ணனுக்குப் பிடிக்கும் !
நீ க்ருஷ்ணனிடம் ப்ரேமையில் உன்னையே கொடுத்து
அவன் இஷ்டப்படி வாழ்ந்தால் உன்னை ராதிகாவுக்குப் பிடிக்கும் !
உன்னிடத்தில் இத்தனைபேர் ப்ரியம் வைக்கக்
காத்திருக்க நீ ஏன் மனிதர்களின பொய்யான அன்பிற்காக
ஏங்குகிறாய் !!!
க்ரிஷ்ணன்னிடம் சரணாகதி ஆகிவிடு !!
ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !!

"அம்பாளுக்கு பண்ற கைங்கர்யம்ன்னு மனஸ்ல உறுதி இருக்கணும்""--மஹாபெரியவா


மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், "நிதி" என்று வரும்போதுதான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்!
"காஞ்சிபுரம் காமாக்ஷிக்கு..ன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன?" "அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டு இருக்கான்.......அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்"
"கோவிலுக்கு செலவழிக்கற காசை, நாலு ஏழை குழந்தைகளுக்கு குடுத்தாலும் புண்ணியம்!!" "மக்கள் சேவையே மகேசன் சேவை...ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்...ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு, அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன?"
இன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டியிருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்றுதான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது...........அது, "பெரியவாளுக்காக பண்ணுகிறோம்" என்ற சந்தோஷம்!
பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா? பாசாங்குச கைங்கர்யம் நினைத்ததை விட மிகச் சிறப்பாக நடந்தது. அதை முக்கியமாக முன்னின்று நடத்திய ஒரு பக்தரிடம் பெரியவா சொன்னார்......"பண வசூலுக்காக ரொம்ப பேர்கிட்ட போயிருப்பே....எல்லாரும் மனசார குடுத்திருப்பா...ன்னு சொல்ல முடியாது. சில பேர் ரொம்ப தாறுமாறாக் கூட பேசி ஒங்க மனஸை ரொம்ப புண்படுத்தியிருப்பா......"ஏண்டாப்பா இந்த வேலைய ஏத்துண்டோம்? பேசாம ஆயிரமோ, ரெண்டாயிரமோ யதா சக்தி குடுத்துட்டு ஒதுங்கிண்டிருக்கலாமோ?...ன்னு கூட தோணியிருக்கும்......
ஆனா, இந்த மாதிரியான பொதுக் கார்யங்கள்ள ஈடுபடரப்போ, நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் சொல்லுவா. அதையெல்லாம் லக்ஷியமே பண்ணப்டாது.
அம்பாளுக்கு பண்ற கைங்கர்யம்..ன்னு மனஸ்ல உறுதி இருக்கணும். இந்த எண்ணம் வந்துடுத்துன்னா....மனஸ் சமாதானம் ஆய்டும்" எத்தனை சத்யமான உபதேசம்! இது பொது சேவையில் ஈடுபடும் [சுயநலமில்லாத சேவை] எல்லாருக்குமான உபதேசம்தான் இது!
ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

*கிருஷ்ண பக்தி என்றால் என்ன?*


பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் கிருஷ்ணரின் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான்.
செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார். செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.
விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.
அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.
”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.
நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார்.
அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.
நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார்.
அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகியது இதை ஒரு சாதாரண மனிதன் செய்ய முடியுமா பகவானைத் தவிர யாராலும் செய்ய முடியாது என அவர் கூறினார்
“இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.
அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர். கிருஷ்ண பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை.
கிருஷ்ணர் ஆகிய எல்லா சூழ்நிலையிலும் நான் ஒருவனே காப்பாற்ற முடியும் என்று எனது பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று பற்றுவதே ”உண்மையான கிருஷ்ணன் பக்தி”
இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் பகவான் கிருஷ்ணர்.